1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reasons behind why vijay actions are failed

ஜெயலலிதா வழியில் விஜய்!.. ஆனால் அதிகாரிகளால் சறுக்கும் நடவடிக்கைகள்!...

vijay
தமிழக முதல்வர் விஜய் பொறுப்பேற்றவுடன் அவரை பற்றி அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் விஜயை மோசமாக விமர்சித்ததல் தூத்துக்குடி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஒரே நாளில் ஜாமின் பெற்றார்.

அதேநேரம், முதல்வர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 வாரங்கள் சிறையில் இருந்த அவர் அதன்பின் ஜாமினில் விடுதலை ஆனார். அதேபோல், இந்நாள் திமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

அதேபோல், முதல்வரை மிகவும் மோசமாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசர் கைது செய்து தஞ்சாவூர் அழைத்து சென்றனர். ஆனால், அவர் ரிமாண்ட் செய்யப்படவில்லை. விசாரணைக்காக மட்டுமே அழைத்து செல்கிறோம்.. கைது செய்ய மாட்டோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

முதல்வர் ஜோசப் விஜயின் அதிரடி நடவடிக்கைகள் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் போல இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.  திமுக ஒரு ஊழல் கட்சி என்கிற இமேஜை முதல்வர் விஜய் ஏற்படுத்த முயற்சி செய்கிறார். ஆனால், அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், போதுமான ஆதாரங்களை திரட்டமுடியவில்லை. எனவே அவர் எடுக்கும் நடவடிக்கைகள் சறுக்குவதாக தலைமை செயலக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
உங்க ஆட்சியில் போதை மருந்து வித்தீங்களா?!.. சட்டசபையில் கடுப்பான அமைச்சர் சரத்!...