இ-சேவை இனி சூப்பர் பாஸ்ட்! வெற்றி தமிழ்நாடு 2.0 வருது - மக்களுக்கு காத்திருக்கும் மெகா பலன்கள்!
தமிழக அரசின் இ-சேவை மையங்கள் வழங்கும் சேவைகளை மேலும் எளிமையாகவும் விரைவாகவும் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் "வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0" என்ற புதிய மேம்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் நவம்பர் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய 2.0 தளத்தின் மூலம் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சர்வர் பழுது மற்றும் தாமதம் போன்ற சிக்கல்கள் முழுமையாகத் தவிர்க்கப்படும். பட்டா, சிட்டா, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அரசுச் சேவைகள் இனி ஒரே கிளிக்கில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தளம் முழுமையான மொபைல் நட்புத் தன்மையுடன் உருவாக்கப்படுவதால், பொதுமக்கள் எங்குிருந்தும் தங்கள் செல்பேசி மூலமாகவே விண்ணப்பிக்க இயலும்.
மேலும், பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாக்க அதிநவீன சைபர் பாதுகாப்பு முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலமாக உடனுக்குடன் அனுப்பப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள கடைக்கோடி மக்களும் அரசு சேவைகளை எளிதில் பெற்றுப் பயனடைய முடியும்.

