1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma talked about jai shriram in stadium

முகமது ஷமியிடம் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்- கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பதில்!

முகமது ஷமி
சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போடி டிராவில் முடிவடைந்த இந்த ஆட்டத்தின் போது, ​​அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கோஷங்களை எழுப்பி இந்திய கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தினர். அப்போது வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியிடம் “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்களை எழுப்பினர்.

இப்போது இதுபற்றி பேசியுள்ள இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா  “ஷமியிடம் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அங்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ”என்று போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் கூறியுள்ளார்.

இதற்கு முன்பே சிலமுறை முகமது ஷமியை அவரது மதத்தை ஒட்டி இணையத்தில் ட்ரோல் செய்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி இறுதிப் போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா!