1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Spain Crowned FIFA World Cup 2026 Champions After Thrilling Win Over Argentina

கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு இத்தனை கோடியா? குவியும் பரிசுமழை...

ஸ்பெயின்
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதில் அந்த அணிக்கு பரிசுகள் குவிந்துள்ளது.
 
நியூ ஜெர்சியில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், பெர்ரன் டோரஸ் அடித்த ஒரே கோல் ஸ்பெயினுக்கு வெற்றியை தேடித்தந்தது. லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை தொடராக கருதப்பட்ட இதில், அர்ஜென்டினா அணி தோல்வியடைந்ததால் மெஸ்ஸி கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆட்டத்தின் பிற்பகுதியில் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது அர்ஜென்டினா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
 
ஸ்பெயின் அணியின் தடுப்பாட்டம் இந்த தொடர் முழுவதும் அபாரமாக இருந்தது. எட்டு போட்டிகளில் விளையாடிய ஸ்பெயின், ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்து உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. 
 
வெற்றிக்குப் பிறகு பேசிய பெர்ரன் டோரஸ், இந்த வெற்றியை ஸ்பெயினின் 4.7 கோடி மக்களுக்கும் சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினுக்கு 50 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும், ஸ்பெயினின் ரோட்ரி சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருதையும், உனாய் சைமன் சிறந்த கோல்கீப்பருக்கான 'கோல்டன் குளோவ்' விருதையும் வென்றனர். 
 
இந்த தொடரின் மொத்த பரிசுகளின் விவரங்கள் இதோ:
 
சாம்பியன்: ஸ்பெயின் - 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
 
இரண்டாம் இடம்: அர்ஜென்டினா - 33 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
 
3-ஆம் இடம்: இங்கிலாந்து - 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
 
4-ஆம் இடம்: பிரான்ஸ் - 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
 
5-8-ஆம் இடங்கள்: 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
 
9-16-ஆம் இடங்கள்: 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
 
17-32-ஆம் இடங்கள்: 11 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
 
33-48-ஆம் இடங்கள்: 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
FIFA உலக கால்பந்து போட்டி!.. அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே?...