வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2023 (15:25 IST)

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி இறுதிப் போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா!

உலக டெஸ்ட் சாம்பியன் தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்த தொடரின் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுவிட்டது. இலங்கைக்கு எதிரான போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்தியா தகுதி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தில் நடக்க உள்ள இறுதிப் போட்டியில் நடக்க உள்ளது.

இதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும ஆஸ்திரேலியா அணிகள் ஐசிசி நடத்தும் தொடரின் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. கடைசியாக இரு அணிகளும் 2003 ஆம் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதின. அந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.