1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Gambhir said that rohith following kohli footsteps

கோலியின் டெம்ப்ளேட்டை ரோஹித் பாலோ செய்கிறார்… அடடா கம்பீரா இது என ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியை கோலி, எப்படி வழிநடத்தினாரோ அப்படியே ரோஹித்தும் பின்பற்றுகிறார் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

ஆஸிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி பற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் கம்பீர் “கோலி உருவாக்கி வைத்த டெம்ப்ளேட்டை ரோஹித் அப்படியே பின்பற்றுகிறார்” எனக் கூறியுள்ளார்.

மேலும் “ரோஹித் சிறந்த கேப்டன்தான். ஆனால் அவருக்கென தனித்த பாணி எதுவும் இல்லை. கோலி எப்படி அணியை சிறப்பாக வழிநடத்தினாரோ, அதையே பின்பற்றி செல்கிறார் ரோஹித். அவருக்கு உண்மையான சவால் என்பது வெளிநாட்டு தொடர்களில் எப்படி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துகிறார் என்பதில்தான் இருக்கிறது” எனக் கூறியுள்ளார். வழக்கமாக கோலியை கடும் விமர்சனம் செய்துவரும் கம்பீர் அவரை பாராட்டி பேசி இருப்பது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
About Writer
vinoth