வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2023 (08:33 IST)

கோலி கேப்டனாக இருந்த போது இதைதான் கற்றுக்கொண்டேன்… ரோஹித் ஷர்மா ஓபன் டாக்!

இந்திய அணிக்கு தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரோஹித் ஷர்மா.

விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து (அல்லது விலக்கப்பட்டதை) இப்போது கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டு வருகிறார். டி 20 உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு இப்போது டி 20 போட்டிகளுக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடந்துவரும் ஆஸி அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை இந்திய அணி வென்றுள்ளது. இந்த போட்டிக்குப் பின்னர் பேசிய ரோஹித் கேப்டனாக கோலியிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயத்தைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் “நான் ஒரு வீரராக இருந்த போது, கோலி கேப்டனாக இருந்த போது ஒவ்வொரு பந்தின் போதும் அழுத்தம் இருக்கவேண்டுமென்பதை அவர் விரும்புவார். நமக்கு விக்கெட் கிடைக்காவிட்டாலும், எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தால்தான், அவர்கள் ஏதாவது தவறு செய்வார்கள். அதை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.