திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (08:21 IST)

ரோஹித் ஷர்மாவால் என்னைப் போல டான்ஸ் ஆட முடியாது… மீம்களுக்கு மிர்ச்சி சிவா பதில்!

தமிழ் திரை உலகின் காமெடி ஹீரோக்களில் ஒருவரான சிவா  ரசிகர்களால் செல்லமாக ‘அகில உலக சூப்பர்ஸ்டார்’ என அழைக்கப்படுகிறார். அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் இப்போது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய மிர்ச்சி சிவா தன்னையும் கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவையும் ஒப்பிட்டு வெளியாகும் மீம்கள் குறித்து நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். அவரது பேச்சு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரோஹித் ஷர்மாவும், மிர்ச்சி சிவாவும் ஒரே மாதிரியாக இருப்பதாக சொல்லி, பலரும் இருவரையும் ஒப்பிட்டு மீம்ஸ்களை பகிர்ந்து வந்தனர். இதுபற்றி பேசிய சிவா “அவர் எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரர். அவரோடு என்னை ஏன் ஒப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். என்னால் அவரை போல கிரிக்கெட் விளையாட முடியாது. அவரால் என்னை போல டான்ஸ் ஆட முடியாது” என தன்னையே கேலி செய்யும் விதமாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் சிவாவின் நடனம் தனித்துவமானது என்பது குறிப்பிடத்தக்கது.