தொடர்புடைய செய்திகள்
- பிபிசி பெயரை குறிப்பிடாமல் 'ஆய்வு' பற்றி அறிக்கை வெளியிட்ட வருமான வரித்துறை
- போராடி கௌரவமான ஸ்கோரை எட்டிய ஆஸி.. 263 ரன்களுக்கு ஆல் அவுட்!
- இரவோடு இரவாக 453 ஊழியர்களை பணிநீக்கம்: கூகுள் இந்தியா அதிரடி நடவடிக்கை..!
- டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றுமொரு மைல்கல்… இன்றைய போட்டியில் அஸ்வின் படைத்த சாதனை!
- 6 விக்கெட்டுக்களை இழந்து திணறும் ஆஸ்திரேலியா.. அஸ்வினுக்கு மேலும் ஒரு விக்கெட்..!
முதல் விக்கெட்டை இழந்த இந்தியா… ஏமாற்றிய ராகுல் & ரோஹித் ஷர்மா!
இந்திய அணி முதல் இன்னிங்ஸை தற்போது ஆடிவரும் நிலையில் முதல் விக்கெட்டை இழந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிய ஆஸி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் காவாஜா 81 மற்றும் அலெக்ஸ் ஹேரியின் 72 ரன்கள் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 263 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 21 ரன்கள் சேர்த்து நேற்றைய ஆட்டத்தை முடித்தது. இன்று தொடர்ந்து ஆடிவரும் நிலையில் முதல் விக்கெட்டாக கே எல் ராகுல் 17 ரன்களுக்கும் அடுத்த விக்கெட்டாக ரோஹித் ஷர்மா 32 ரன்களுக்கும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.