1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Issues Historic GO: Full Interest Waiver and 60 Percent Subsidy for Women Fishermen Under Deep-Sea Fishing Scheme

ரூ.1.20 கோடி செலவில் மீனவர்களுக்கு படகு.. வட்டியை தமிழக அரசே கட்டும்.. அசல் மட்டும் கட்டினால் போதும்..

ஆழ்கடல் மீன்பிடி திட்டம்
தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வாங்குவதற்காக தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க அரசாணையை வெளியிட்டுள்ளது. 
 
கடந்த 2026-27 பட்ஜெட் அறிவிப்பின்படி, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் மொத்தம் 25 நவீன ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ளன. இதில் 20 படகுகள் பொதுப்பிரிவு மீனவர்களுக்கும், 5 படகுகள் பெண் மீனவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு படகின் மொத்த மதிப்பு ரூ.1.20 கோடியாகும். இதில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியமும், பெண் மீனவர்களுக்கு 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
 
இத்திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, வங்கிக் கடனுக்கான ஒட்டுமொத்த வட்டித்தொகையையும் தமிழக அரசே நேரடியாக வங்கிகளுக்கு செலுத்துகிறது. இதனால் 7 ஆண்டு கால வங்கிக்கடன் சுமை குறைந்து, வெறும் 4 ஆண்டுகள் 9 மாதங்களிலேயே கடன் முழுமையாக அடைக்கப்படும். 
 
வட்டி மானியத்திற்காக மட்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.4.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு செயலாளர் அனு ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இம்மாபெரும் திட்டத்தின் மூலம் தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் பாதுகாப்பாக மீன்பிடித்துத் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இன்று டெல்லி செல்லும் முதல்வர் விஜய்!.. யாருடனெல்லாம் மீட்டிங்?...