1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TVK Govt Refutes DMK False Propaganda: Increases Monsoon Relief Fund for Tamil Nadu Fishermen

மீனவர்களுக்கான நிதியை குறைத்துவிட்டதா தவெக பட்ஜெட்.. உண்மை என்ன?

தவெக அரசு
திமுக மீண்டும் ஒரு பொய்யான பிரச்சாரத்தை கையில் எடுத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது! “மீனவர்களுக்கான நிதியை அரசு குறைத்துவிட்டது” என்ற பொய்யை இணையத்தில் பரப்பி வரும் திமுகவின் வேஷம் இப்போது வெளிப்பட்டுவிட்டது.
 
உண்மை என்ன?
 
கடந்த திமுக ஆட்சியில் (2025–26) மீனவர்களுக்கு மழைக்கால உதவித்தொகையாக ரூ. 6,000 மற்றும் மீன்பிடித் தடைக்கால உதவித்தொகையாக ரூ.8,000 வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தவெக அரசு (2026–27) பொறுப்பேற்றவுடன் மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் மழைக்காலத்தைக் கணக்கில் கொண்டு முதற்கட்டமாக மழைக்கால உதவித்தொகையை ரூ.6,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தியுள்ளது! அதேவேளையில், தடைக்கால உதவித்தொகையான ரூ.8,000 குறையாமல் தொடர்ந்து முழுமையாக வழங்கப்படுகிறது.
 
அரசு குறைத்தது நிதி அல்ல, மாறாகப் புதுயுகத் தவெக அரசு மீனவப் பெருமக்களுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது என்பதே நிதர்சனம். திமுக அரசு கொடுத்ததை விடக் கூடுதலாக ரூ.1,000 உயர்த்திக் கொடுத்திருப்பது மக்கள் நலன் சார்ந்த தவெக அரசின் வெளிப்படையான செயல்பாடு!
 
எந்தவித ஆதாரமும் இன்றி வதந்திகளையும் பொய்யான தகவல்களையும் பரப்புவதை விட்டுவிட்டு, அரசின் இந்த நற்செயல்களை நேர்மையோடு பார்க்க வேண்டும். போலிப் பிரச்சாரங்களால் தவெக அரசின் சாதனை வெளிச்சத்தை ஒருபோதும் மறைக்க முடியாது!
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டாலும் காவல்துறை பொறுமையாக கையாள வேண்டும்: சிஜேபி போராட்டம் குறித்து நீதிமன்றம்..