1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. story behind how nishanth cought in police

நிஷாந்தின் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்ட டிரைவர்!. சிக்கியது எப்படி?...

nishanth
மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் 11.3 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்பாக ஏற்கனவே யூடியூபர்  மீனாட்சி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கொள்ளையடித்த நிஷாந்தும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பெங்களூரிலிருந்து ஆம்னி பஸ் மூலம் அவர் சேலம் சென்றபோது பேருந்து ஓட்டுனர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தர்மபுரியில் வைத்து நிஷாந்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் காட்டிய இடத்திலிருந்து 6.3 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. தற்போது நிஷாந்த் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் நிசாந்த் சிக்கியது எப்படி என பார்ப்போம்..

முகக் கவசம், தொப்பி அணிந்து கொண்டு பேருந்தில் ஏறி நிசந்தை அவரது நண்பர்கள்தான் வழியனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுனரின் கையில் ரூ.500-ஐ கொடுத்து நிஷாந்தின் உணவு, தேநீர் செலவுகளை கவனித்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள். அதன்பின் செல்போனை வாங்கி ‘நான் நிஷாந்த் பேசுகிறேன்’ என அவர் கூறியது ஓட்டுநர் மாதையனின் காதில் விழுந்துள்ளது.

வேறு ஒரு இடத்தில் பேருந்து நிறுத்திய போது நிஷாந்திடம் செல்போன் இருந்ததால் ஓட்டுநருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனது பள்ளி வகுப்பு தோழரான அதியமான் கோட்டை காவலருக்கு ஓட்டுநர் தகவல் கொடுத்துள்ளார். போலீசாரின் அறுவுறுத்தலின் பேரில் பேருந்து கதவுகளை மூடிவிட்டு தேநீர் அருந்துவதற்காக ஓட்டுநர் மாதையன் இறங்கியிருக்கிறார்.

மாதையனின் செயலால் சந்தேகமடைந்த நிஷாந்த் ஓட்டுநர் இருக்கை அருகே உள்ள கதவு வழியாக இறங்கி தப்பிச் செல்ல முயன்ற போது போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முருகனை ஒப்பிட்டு விஜய்யை பாடினேனா? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்...