டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் - தமிழக அரசு அரசாணை
டாஸ்மாக் கடைகளில் வாங்கப்படும் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் காலி மதுபானத் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. அதன்படி, பாட்டிலுக்கான ரூ.10 எம்.ஆர்.பி விலையில் சேர்க்கப்பட்டது. மேலும், பாட்டிலை திரும்ப கொடுத்துவிட்டு மது பிரியர்கள் ரூ10-ஐ திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி டாஸ்மாக் கடைகளை திறக்கவில்லை. அவர்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில்தான் காலி மதுபான பாட்டில்களை எளிதாக திரும்ப பெரும் வகையில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை அமைக்க அரசு அனுமதி அளித்திருக்கிறது..
இந்த திட்டத்தின் படி டாஸ்மாக் பார் அருகில் இந்த ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்கள் வைக்கப்படும். அதில் குறிப்பிட்ட இடத்தில் பாட்டிலை போட வேண்டும். அப்போது மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம் இந்த இயந்திரத்தின் மூலம் நேரடியாக பணம் பெற முடியாது. ஒருவேளை பாட்டிலில் உள்ள கியூ.ஆர் குறியீடு வேலை செய்யவில்லை என்றாலும் அந்த பாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் படிப்படியாக ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.