எம்.எல்.ஏ கார் வாங்க ரூ.15 லட்சம்!.. அமைச்சர்களுக்கு ரூ.25 லட்சம்!.. தமிழக அரசு அரசாணை!...
தமிழக சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கார் வாங்குவதற்கான புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி எம்.எல்.ஏக்கள் கார் வாங்குவதற்கு தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்திற்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், அரசு கொறடா, எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு கார் வாங்க ரூ.26 லட்சம் உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் 5 சதவீதம் உயர்த்தப்படும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதமே சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்கட்சியான திமுக எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக தவெக அரசு கூறும் நிலையில் இது தேவையில்லாத ஒன்று எனவும், திமுக எம்.எல்.ஏக்களுக்கு கார் வேண்டாம் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.