1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Hyper Sonic weapon threatens the world Russia is testing

உலகை அச்சுறுத்தும் ’ஹைபர் சோனிக் ஆயுதம்’ ... ரஷ்யா சோதனை !

Russia Test
உலகில் உள்ள வல்லரசு நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. அமெரிக்காவுக்கே சவால் விடுமளவு தொழில்நுட்பங்களையும் பொருளாதார வலிமையும் தன்னகத்தே  கொண்டுள்ள நாடு அது .இந்நிலையில் உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வண்ணம் ஒரு புதிய ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
ஏற்கனவே விண்வெளிக்கு முதன் முதலில் மனிதனை (யூரி ககாரின்_ 1961)அனுப்பிய பெருமை கொண்டது ரஷ்ய நாடு. சோவியத் ஒன்றியத்தின் வொஸ்டொக் 1 எனும் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்று சுமார் 108 நிமிடங்களில் உலகை வலம் வந்து சாதனைப் படைத்தார். 
 
இந்நிலையில், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஹைபர் சோனிக் ஆயுதத்தை எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்
 
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
உலகில் ஹைபர் சோனிக் எவுகணை ஏவிய முதல் நாடு என்ற பெருமை ரஷ்யா பெற்றுள்ளது.உலகில் எந்த ஒரு நாட்டு ராணுவத்தாலும் இந்த ஏவுகணையை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
 
மேலும், எங்களின் தனித்துவம் மிக்க இந்த முன்னேற்றத்தைப் பார்த்து மற்ற நாடுகள் எங்கள் சாதனையை தொட முயற்சி செய்ட்கின்றன என தெரிவித்துள்ளார். 
About Writer
sinoj kiyan
அடுத்த கட்டுரையில்
வாக்குப்பெட்டியை அலேக்காய் திருடிய திருடர்கள்!