செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (16:41 IST)

இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்தால் ஏவுகணைதான்! – மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தரும் நாடுகள் மேல் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு இந்தியாவோடு கடுமையான காழ்ப்புணர்ச்சியில் பாகிஸ்தான் இருந்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமரோ அல்லது அமைச்சர்களோ அவ்வபோது இந்தியாவை மிரட்டும் தோனியில் பொதுவெளியில் அடிக்கடி பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கு ஆதரவு தரும் நாடுகளையே மிரட்டும் தோனியில் பேசியுள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் அமீன் கண்டப்பூர். ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான பதற்றநிலை அதிகரிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் மூளும்.

இந்தியாவை ஆதரிக்கும் நாடுகளும் பாகிஸ்தானுக்கு எதிர்யாகவே பாவிக்கப்படும். இந்தியா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் மீது ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்படும்” என மிரட்டும் தோனியில் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இவ்வாறு உலக நாடுகளை மிரட்டும் தோனியில் பேசியிருப்பது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.