செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2019 (16:23 IST)

மின்னல் வேகத்தில் செல்லும் பினாகா ஏவுகணை! – சோதனை வெற்றி!

இந்தியாவில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்தியா ராணுவத்திற்கு தேவையான அதிநவீன ஆயுதங்களை வெளிநாடுகளில் வாங்குவதோடு மட்டுமல்லாமல் சொந்தமாகவும் சில ஆயுதங்களை தயாரித்தும் வருகிறது.
அஸ்திரா என்ற வானவெளி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை இந்தியாவால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. செயற்கை கோள்களை தாக்கி அழிக்கும் பிருத்வி ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது பினாகா ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் சீறி பாயும் பினாகா 90 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது.

டிஆர்டிஓ தயாரித்துள்ள இந்த பினாகா ஏவுகணை ஏற்கனவே சோதனை செய்து வெற்றிப்பெற்றது. மீண்டும் பரிசோதனை மற்றும் பராமரிப்பு சோதனையாக இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.