நான் உயிருடன் இருக்கும் வரை காவல் தடுப்பு மையங்கள் அமைக்கப்படாது - மம்தா பானர்ஜி
இந்தியாவில் பாஜக தலைமையிலான ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள், எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் போராடி வருகின்றனர்.இப்போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மத்திய அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது :
குடியுரிமை உள்பட எந்த ஒரு உரிமையையும் தங்களிடம் இருந்து பறித்துவிட முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், தான் உயிருடன் இருக்கும் வரையில் மேற்கு வங்க மாநிலத்தில் தடுப்பு காவல் மையங்கள் அமைக்கப்பாடது என தெரிவித்துள்ளார்.