1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. bis warning against fake gold in recent days

தங்கத்தில் கலக்கப்படும் ரீனியம்?.. பொதுமக்கள் உஷார்.. கடும் எச்சரிக்கை....

bis gold warning
கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை ஒரு பவுன் ஒரு லட்சத்தை தொட்டது. அதன் பின் ஒரு லட்சத்து 15 ஆயிரம் வரை சென்றது.  ஆனால் கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து இன்று கிட்டத்தட்ட 90 ஆயிரம் ரூபாய்க்கு வந்து விட்டது.

75 ஆயிரம் ரூபாய் வைர சவரன் தங்கத்தின் விலை குறையும் என சிலர் சொல்கிறார்கள். அது நடக்குமா என்பது தெரியவில்லை. தங்கத்தின் விலை சவுரனுக்கு 90 ஆயிரம் வரை வந்து விட்டதால் தங்கத்தை வாங்கும் ஆர்வம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பலரும் தங்கத்தில் கலப்படம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ரீனியம் என்ற வேதிப்பொருளை தங்கத்தில் கலப்பதாக செய்திகள் பரவி வருகிறது..

இந்நிலையில், தங்கத்தில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது. தங்கத்தில் கலப்படம் செய்வதற்கான பொருளை தயாரிப்பவர்கள், பயன்படுத்துபவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...