தொடர்புடைய செய்திகள்
- அடுத்தடுத்து கர்ப்பமாகி குழந்தை பெற்ற 9 நர்சுகள்: வைரலாகும் புகைப்படங்கள்!
- சிறுநீரக பிரச்சனை என நினைத்த பெண்ணிற்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி: மருத்துவர்கள் வியப்பு
- காஷ்மீர் விவகாரம்: டிரம்புடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை
- அமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை விடுவித்த ஜிப்ரால்டர்
- தொற்றிக்கொண்ட பதற்றம்: முறிந்தது வட மற்றும் தென் கொரிய உறவு!
மத்திய தூர சீரியங்கு ஏவுகணையை பரிசோதித்தது அமெரிக்கா - ரஷ்ய ஒப்பந்தத்தில் இருந்து விலகல் எதிரொலி
மத்திய தூர சீரியங்கு ஏவுகணை ஒன்றை அமெரிக்கா பரிசோதனை செய்துள்ளது.
கலிஃபோர்னியா கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இத்தகைய சோதனைகளை தடை செய்யும் வகையில், ரஷ்யா - அமெரிக்கா இடையே பனிப்போர் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து இம்மாதம் 2-ம் தேதி அமெரிக்கா விலகியது. இதையடுத்து, தற்போது இந்த சோதனையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் (இன்டர்மீடியேட் ரேஞ்ஜ் நியூக்ளியர் ஃபோர்சஸ் டிரீட்டி) 1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது.
500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது.
தற்போதைய சோதனை பற்றி கருத்துத் தெரிவித்துள்ள ரஷ்யா, ராணுவப் பதற்றத்தை அமெரிக்கா அதிகரிப்பதாக கூறியுள்ளது.
மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் முறிவு புதிய ஆயுதப் போட்டியை தூண்டும் என்று பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள சேன் நிக்கோலஸ் தீவில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை அணு ஆயுதம் ஏந்திச் செல்லக்கூடியது அல்ல என்று அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்