1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. AI-Powered Cyberattacks Trigger Growing Security Crisis Across Japan

அதிபயங்கர சைபர் அட்டாக்.. 7 நாட்களுக்கு தேவையான பொருட்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.. ஜப்பான்

ஜப்பான் சைபர் தாக்குதல்
செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்படும் தொடர் சைபர் தாக்குதல்களால் ஜப்பான் கடுமையான இணைய பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. நாட்டின் மின்சாரம் மற்றும் எரிசக்தி தொடர்பான அரசுத்துறை இணையதளங்கள், நாணய வர்த்தக தளங்கள்  நிதித்துறை, சில்லறை வர்த்தகம், போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகள் எனப் பல பிரிவுகளும் இந்த ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
 
குறிப்பாக, சீனாவில் உருவாக்கப்பட்ட 'ஆர்டெக்ஸ்'  என்ற ஏஐ கருவியை பயன்படுத்தி இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். முன்னணி ஜிஎம்ஓ  இன்டர்நெட் குழுமம், 26,000க்கும் மேற்பட்ட சர்வர் சூழல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி வருகிறது. மேலும், 1,25,000 காவல் துறை அதிகாரிகளின் தகவல்களும் கசிந்துள்ளதாகத் தேசியக் காவல் முகமை தெரிவித்துள்ளது.
 
2026-ஆம் ஆண்டில் இதுவரை 723 சைபர் தாக்குதல்கள் பதிவாகி முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளன. இந்த விவகாரத்தை "சைபர் வெளியின் அவசரநிலை" எனக் குறிப்பிட்ட ஆளும் கட்சி, 'செயல்பாட்டுச் சைபர் பாதுகாப்பு'   சட்டத்தின் கீழ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. நிலைமையை எதிர்கொள்ள மக்கள் 3 முதல் 7 நாட்களுக்குத் தேவையான அவசியப் பொருட்களைப் சேமித்து வைக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆந்திரா, தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் SIR.. தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..