1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. indian uk migration drops in current year

ஒரு வருடத்தில் இங்கிலாந்தில் குடியேறிய 7.38 லட்சம் இந்தியர்கள்!...

england
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இந்தியர்கள் வசிக்காத நாடுகளே இல்லை என சொல்லலாம். புதிது புதிதாக இந்தியர்கள் பல நாடுகளுக்கும் குடியேறி வருகிறார்கள். அதில் முக்கியமான நாடாக இங்கிலாந்து இருக்கிறது. இங்கிலாந்தில் நிறைய இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதேபோல், நிறைய இந்தியர்களுக்கு சுற்றுலா செல்ல பிடித்த இடமாகவும் இங்கிலாந்து இருக்கிறது..

இந்நிலையில், ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரையிலான ஒரு வருடத்தில் 7.38 லட்சம் பேர் இங்கிலாந்துக்கு குடியேறியிருக்கிறார்கள். அவர்களில் இந்தியர்கள் மட்டும் 1.23 லட்சம் பேருடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்தியர்களில் 76 ஆயிரம் பேர் படிப்புக்காகவும், 40 ஆயிரம் பேர் வேலைக்காகவும் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர் .

அதேநேரம், இந்த வருடம் இங்கிலாந்தில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிகபட்சமாக, ஜூலை 2022 முதல் ஜூன் 2023 வரையிலான ஒரு வருடத்தில் 3.7 லட்சமாக இருந்த இந்தியர்களின் குடியேற்ற எண்ணிக்கை தற்போது 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஹைதராபாத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் கிளை.. சென்னையில் எப்போது?