1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. UK Net Migration Drops to 77,000 Amid Tighter Visa Rules and Higher Outflows

பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கடும் சரிவு.. கடுமையான விசா கட்டுப்பாடுகள் காரணமா?

பிரிட்டன் குடியேற்றம்
பிரிட்டனுக்கு நிகர குடியேற்றம் கடந்த ஜூன் 2026 வரையிலான ஓராண்டில் 77,000 ஆக குறைந்துள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தை தவிர்த்து, கடந்த மூன்று தசாப்தங்களில் இது மிகக் குறைந்த அளவாகும் என பிரிட்டன் தேசிய புள்ளியியல் அலுவலகம்  தெரிவித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த சுமார் 9.44 லட்சம் என்ற எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இது சுமார் 92 சதவீதம் குறைவாகும்.
 
கடுமையான விசா கட்டுப்பாடுகள், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பத்தினரை அழைத்து வருவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பணி விசாக்களுக்கான சம்பள உச்சவரம்பு உயர்வு ஆகியவற்றால் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளிலிருந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக வேலை, படிப்பு மற்றும் புகலிடக் கோரிக்கைகளுக்கான வருகை குறைந்துள்ளதுடன், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் வெளியேறுவதும் அதிகரித்துள்ளது.
 
இருப்பினும், குடியேற்றம் குறைவதால் நீண்டகால அடிப்படையில் பிரிட்டனின் உழைப்புச் சக்தி குறைந்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி வருவாயில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்த திட்டம்...Delimitation பில் பாஸ் ஆகுமா?