என்கிட்ட சாரி கேட்டீங்களே!.. மறந்து போச்சா விஜய்?!.. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ...
சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கலைஞர் கருணாநிதி மற்றும் அவரின் மருமகன் முரசொலி மாறன் ஆகியோர் மீது சொல்லப்பட்ட ஊழல்கள் மற்றும் அமலாக்கத்துறை திமுக மீது சுமத்திய ஊழல்கள் பற்றி பேசினார். அதேபோல், மிசா காலத்தில் முக ஸ்டாலினின் கைது செய்யப்பட்டது பற்றியும் விமர்னம் செய்திருந்தார்..
இந்நிலையில், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் தம்பி விஜய் நீங்கள் சொன்னது உண்மைதான்.. நான் சிறை சென்றபோது அங்கு எனக்கு பல கொடுமைகள் நடந்தன.. கைதான எங்கள் அனைவரையும் தொழுநோய் நோயாளிகள் இருந்த அறையில்தான் அடைத்தனர். 10 பேருக்கு மிக சிறீய அறையில் அடைத்து வைத்தனர். சின்ன பானை ஒன்று கொடுத்தார்கள். அதில்தான் நாங்கள் அனைவரும் சிறுநீர் கழிக்க வேண்டும்.. மிகவும் துர்நாற்றமான அறை அது. இரவில் தூங்கிடாமல் போலீசார் பூட்ஸ் காலால் மிதிப்பார்கள்..
சிறையில் பல கொடுமைகள் நடந்தது.. போராளிகள் எல்லாம் அதை தாண்டிதான் வந்திருக்கும்.. சந்தேகம் இருந்தால் நீங்கள் சட்டசபையில் ஒரு லைப்ரரி இருக்குன்னு சொன்னீர்களே.. அங்கு எல்லா ஆவணமும் இருக்கும்.. போய் படிச்சு பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. என்னோட போராட்ட வரலாறு என்னன்னு உங்களுக்கு தெரியும்..நீங்கள் முதல்வரானதும் என்னை நேரில் வந்து சந்தித்தீர்கள்.. அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை மிகவும் விமர்சித்துப் பேசி விட்டேன்.. I am Sorry Sir என சொன்னீர்கள்..
அதை நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை.. யாரைப் பற்றி பேசும்போதும் கண்ணியமாக பேசுங்கள் என்று கூறினேன்.. அதை மறந்து விட்டீர்கள் போல.. முதல்வருக்கான கண்ணியத்துடன் உங்கள் வார்த்தைகள், உடல் நிலை இருக்க வேண்டும்.. நாம்தான் மக்களுக்கு முன் உதாரணம்.. அதை மறந்து விடாதீர்கள்.. பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்.. சட்டமன்றத்தை ரீல்ஸ் வீடியோக்கு பயன்படுத்தி, நாங்கள் கட்டிய பாலத்தில் நின்று போட்டோசூட் செய்கிறீர்கள்..
தம்பி விஜய்!.. நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கென்று ஒரு மாண்பும், மரியாதையும் இருக்கிறது.. பல பெரும் தலைவர்கள், மாமனிதர்கள் தமிழ்நாட்டை செதுக்கிய இடம்.. அந்த பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.. சட்டமன்றத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை, மக்கள் நலத்திட்டங்கள், தமிழ்நாட்டை மேலும் மேலும் எப்படி முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வது, தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படி பாதுகாப்பது? இதையெல்லாம் விவாதம் செய்யுங்கள். அதுதான் தமிழ்நாட்டுக்கும்.. தமிழ் மக்களுக்கும் நல்லது.. அதை விட்டுவிட்டு தேவையில்லாத சர்ச்சைகளை சட்டமன்றத்தில் பேச வேண்டாம் என்பதுதான் என்னுடைய கோரிக்கை
திமுக தொண்டர்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஆட்சியில் இருக்கிறோமா இல்லையோ என்னைக்கும் தமிழ்நாட்டில் உரிமைக்காகவும் மக்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் நாங்கள் சண்டை செய்து கொண்டே இருப்போம்.. அவங்க தாத்தாவுக்கு சண்டை செஞ்சோம். அவங்க அப்பாவுக்கு சண்டை செஞ்சோம்.. இப்ப அவங்களுக்காகவே சண்டை செய்வோம் என பேசியிருக்கிறார்.