1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. election commission approved tvk as state party

தவெகவுக்கு மாநில கட்சியாக அங்கீகாரம்!.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

vijay tvk
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் துவங்கிய அரசியல் கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம். முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு 35 சதவீத வாக்குகளையும் இந்த கட்சி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தின் முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் விஜய் மாறியிருக்கிறார்..

இந்நிலையில், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் தவெக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்திருக்கிறது. தவெகவின் தேர்தல் சின்னமான விசில் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து,
தமிழகத்தில் மாநில அங்கீகரிப்பு அரசியல் கட்சியின் எண்ணிக்கை ஆறிலிருந்து ஏழாக உயர்ந்துள்ளது.

ஒரு அரசியல் கட்சி 6 சதவீத வாக்குகள் அல்லது 2 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அதை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். ஆனால், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு 35 சதவீத வாக்குகளையும் பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ்.பாபு!.. சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை!...