1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. murasoli conemend cm vijay talk about misa

புத்தி அப்படி!.. தரங்கெட்ட முதல்வர்!.. விஜயை அட்டாக் பண்ணும் முரசொலி!...

vijay
கடந்த திங்கள் கிழமை சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் கலைஞர் கருணாநிதி தொடர்பான சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த திமுகவுக்கு எதிரான விஷயங்கள் பற்றி பேசினார். அதேபோல் ‘எதற்கெடுத்தாலும் நாங்கள் மிசாவை பார்த்தவர்கள்.. மிஷாவை பார்த்தவர்கள் என திமுக தம்மட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால் அப்போது என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்’ என்று சொல்லிவிட்டு தனது முகத்தின் தாடையினருகே கையை காட்டி ஒரு செய்கை செய்து காட்டினார்..

அதாவது மிசா காலத்தில் கைது செய்யப்பட்ட மு.க ஸ்டாலினை போலீசார் தாக்கியதில் அவரின் தாடை பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.. அதைத்தான் முதல்வர் விஜய் நக்கலடித்துள்ளார் என எல்லோரும் புரிந்து கொண்டனர். இதற்கு திமுக மட்டுமில்லாமல் தவெகவுக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

ஒரு முதல்வர் இப்படி அநாகரிகமாக பேசக்கூடாது என பலரும் கூறினர். சமூக வலைதளங்களில் பலரும் விஜய்க்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர். இதையடுத்து விஜயோ ‘எந்த உள்நோக்கத்துடன் நான் அப்படி செய்யவில்லை’ என விஜய் டிவிட்டரில் பதிவிட்டார்.

விஜய்க்கு எதிராக வருகிற 12-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருக்கிறது. ஒருபக்கம் திமுகவின் முரசொலி நாளிதழில் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் ‘தமிழ்நாடு வரலாற்றில் தரங்கெட்ட முதலமைச்சர் என்றால் அது விஜய்தான்.. கோட்டையை ஒரு அசிங்கத்தின் கையில் கொடுத்து தமிழ்நாடு அவமானப்பட்டு நிற்கிறது.. அசிங்கமான படங்களில் நடித்து அருவருப்பான காட்சிகளில் நடித்து ஆபாசத்தையே மூலதனமாக்கி ஹீரோவானவர் என்பதால் அதையே அரசியலும் செய்து வருகிறார். அவரவர் புத்தி அவரவர் பேச்சில் தெரியும் என்பார்கள்.. அதைத்தான் ஒவ்வொரு நாளும் விஜய் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்’ எனக் கூறப்பட்டிருக்கிறது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
உன் மகளை நான்தான் வளர்த்தேன்!.. 45 லட்சம் சம்பளம் வேணும்!.. பாட்டி தொடர்ந்த வழக்கு!..