1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thoothukudi's Rise as India's Next Shipbuilding Powerhouse

தமிழகத்தின் பொருளாதாரத்தை உலக அளவில் உயர்த்தும் தூத்துக்குடி.. அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்..

தூத்துக்குடி
தமிழகத்தின் பொருளாதாரத்தையும் உலக அளவில் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை என அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்க்த்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: 
 
தூத்துக்குடி மாவட்டம் வெறும் இலக்குகளை நோக்கி மட்டும் நகராமல், தற்போது அதிரடியான செயல்களில் இறங்கியுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனை மற்றும் சிறப்பான தலைமையின் கீழ், தமிழகம் வளர்ச்சி பாதையில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் அமைக்கப்பட உள்ள புகழ்பெற்ற எச்.டி. ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
 
இந்த திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு மற்றும் திட்ட சாத்தியக்கூறு ஆய்வு போன்ற முக்கியமான கட்டங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் அமையவிருக்கும் பசுமை கப்பல் கட்டும் தொழிற்பேச்சில் எச்.டி. ஹூண்டாய் நிறுவனம் தனது முதன்மைத் தளத்தை அமைப்பதில் உறுதியாக உள்ளது. இதற்காகத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அந்நிறுவனம் நம்பிக்கையுடன் எடுத்து வருகிறது.
 
இந்த மாபெரும் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டம் இந்தியாவின் அடுத்த முக்கிய கப்பல் கட்டும் மையமாக உருவெடுத்து வருகிறது. இது இப்பகுதி இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தமிழகத்தின் பொருளாதாரத்தையும் உலக அளவில் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.
 
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
கப்பு முக்கியம் பிகிலு!.. மூன்று கட்சிகளின் இமேஜும் ரிசல்ட்ல இருக்கு!.. வெற்றி யாருக்கு?...