1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thirumavalavan advice joseph vijay for his actions

விஜய் இப்படி பண்ணக்கூடாது!.. கவனமா இருக்கணும்!.. திருமா அட்வைஸ்!..

thiruma
கடந்தது திங்கட்கிழமை சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் சொன்ன முதலமைச்சர் ஜோசப் விஜய் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, அவரின் மருமகன் முரசொலி மாறன் ஆகியோர் ஊழல் செய்ததாக குறிப்பிடப்பட்டிருப்பதக கூறினார்.

அதோடு, ‘திமுக எப்போதும் நாங்கள் மிசாவை பார்த்தவர்கள்.. மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள்.. உண்மையில் மிசா காலத்தில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்’ என சொல்லி தனது கையை தனது முகத்தின் தாடைக்கு அருகில் கொண்டு சென்று ஒரு சைகையை செய்து காட்டினார். அதாவது மிசா காலத்தில் கைது செய்யப்பட்ட ஸ்டாலினை போலீசார் தாக்கியதில் அவரின் தாடை பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.. அதைத்தான் விஜய் நக்கலடித்தார் என எல்லோரும் புரிந்து கொண்டார்கள்..

இது திமுகவினரை கொந்தளிக்க செய்திருக்கிறது.. மேலும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியின் தலைவர்களும் விஜயை கண்டித்திருந்தனர். ஒருபக்கம் முதலமைச்சர் கண்ணியமாக பேச வேண்டும்.. இப்படியெல்லாம் அநாகரிகமான நடந்து கொள்ளல் கூடாது என பலரும் கருத்து சொல்ல ‘நான் எந்த உள்நோக்கத்துடன் அப்படி செய்யவில்லை’ என முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் விளக்கமளித்தார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜயின் உடல் மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. உள்நோக்கம் கொண்டதல்ல என விஜய் விளக்கம் கொடுத்தாலும் உடல் மொழிகள் கண்ணியமான அணுகுமுறை இல்லை.. எந்த ஒரு சூழலிலும் ஒருவரின் தன்மதிப்பை குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் இல்லை.. அரசியல் விமர்சனங்கள் வேறு. ஒருவரின் தன்மதிப்பை காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு.. மகத்தான பொறுப்பில் உள்ள முதலமைச்சர் விஜய் தனது உடல் மொழியில் மிக மிக கவனத்துடன் இருப்பது நல்லது’ என அறிவுரை செய்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதல்வர் விஜய் உசிலம்பட்டியில் தொடங்கி வைப்பது ஏன்? முக்கிய காரணம் இதுதான்...