மிசா விவகாரம்!.. விஜய்க்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!...
கடந்த பல வருடங்களாகவே நாங்கள் மிசாவி பார்த்தவர்கள்.. பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்து எமர்ஜென்சியை எதிர்த்து போராடியவர்கள் என திமுக சொல்லி வருகிறது. மேலும், மிசா காலத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது போலீசார் அவரை தாக்கினார்கள். ஒரு வருடம் அவர் சிறையிலிருந்தார். அப்படி சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியவர் எங்கள் தலைவர் என திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். முக ஸ்டாலினும் இதுபற்றி பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
ஆனால், கடந்த திங்கட்கிழமை சட்டசபையில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய் மிசா காலத்தில் என்ன நடைபெற்றது என்று எல்லோருக்கும் தெரியும். என சொல்லி தனது கையை தாடைக்கு அருகில் காட்டி ஒரு செய்கை காட்டினார்.. அதாவது போலீசார் அடித்ததில் ஸ்டாலின் தாடை பாதிக்கப்பட்டதையே விஜய் சைகையால் காட்டியதாக பலரும் புரிந்துகொண்டனர்.
அதன்பின் நேற்று சட்டசபையில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் மிசா காலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் தொடர்பான வழக்குகள் என பலரும் கைது செய்யப்பட்டனர்.. அப்போது ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார்.. ஆனால் மிசாவுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை.. அவர் பெண் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். மிசாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முக ஸ்டாலின் பெயர் இல்லை எனக் கூறியிருந்தார்.. ஒருபக்கம், விஜயின் செய்கைக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் அப்படி செய்யவில்லை என விஜய் விளக்கமளித்தார்.
இதைத்தொடர்ந்து எதற்காக மிசா காலத்தில் முக ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மிசா கொடுமைகளை அனுபவித்த ஸ்டாலின் தியாகத்தை சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்தி விட்டதாக முதலமைச்சர் விஜயை கண்டித்து வருகிற 12-ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருக்கிறது...