ஒரே மாதத்தில் "பொன்னியின் செல்வன்" படப்பிடிப்பு நிறைவு - அடுத்த கட்ட லொகேஷன் எங்கு தெரியுமா?

papiksha| Last Updated: வெள்ளி, 10 ஜனவரி 2020 (13:24 IST)
மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படம் பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடிக்கும் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதனாலே சினிமா பிரியர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
 
கல்கி நாவலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில்  ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரின் காட்சிகளைப் படமாக்கி வந்தார் மணிரத்னம். தாய்லந்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 
 
சமீபத்தில்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  வீர வாள் கொண்ட 'பொன்னியின் செல்வன்' படத்தின் லோகோவை வெளியிட்டு படத்தின் பிரம்மிப்பை காட்டியிருந்தனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆச்சர்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மாதத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்து அசத்திய படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.மேலும் மிக விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :