ஏற்கனவே ரெண்டு ஹிட் கொடுத்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுப்பாரா விஜய்? ரசிகர்கள் ஆர்வம்!

Last Modified திங்கள், 26 அக்டோபர் 2020 (14:12 IST)

நடிகர் விஜய் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தின் இயக்குனராக பேரரசு நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக முருகதாஸ் சொன்ன கதையில் இடைவேளைக்குப் பின் வரும் பகுதிகளில் தனக்கு முழு திருப்தி இல்லை என விஜய் சொன்ன நிலையில் அதற்காக கதையை மீண்டும் திருத்தி எழுதி போய் கூறியுள்ளார் முருகதாஸ். ஆனால் அப்போதும் விஜய்க்கு முழு திருப்தி இல்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தில் இருந்து ஏ ஆர் முருகதாஸ் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை. தயாரிப்பு நிறுவனத்துடனும் விஜய்யுடனும் முருகதாஸுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என சொல்லப்படுகிறது.


இதனால் இப்போது விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான இயக்குனர்கள் பட்டியலில் மகிழ் திருமேனி மற்றும் இயக்குனர் பேரரசு ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மகிழ் திருமேனி உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்க உள்ளதால் ஏற்கனவே தனக்கு திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த பேரரசுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :