செவ்வாய், 24 ஜூன் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 9 ஜூன் 2025 (18:26 IST)

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

BTS Comeback

உலகம் முழுவதும் பிரபலமான கொரிய இசைக்குழுவான BTS ஐ சேர்ந்த பலரும் ராணுவ பணிகளுக்காக சென்றுவிட்டு திரும்பும் நிலையில் அவர்களை வரவேற்க தென்கொரியா தயாராகி வருகிறது.

 

தென்கொரியாவில் தொடங்கி உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் இசைக்குழுதான் BTS. பர்ப்பிள் வண்ணத்தை அடையாளமாக கொண்ட இந்த பிடிஎஸ் குழுவிற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களில் பல கோடி பேர் பெண்கள்தான். கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டு வரும் பிடிஎஸ் குழுவில் கன்னி பெண்கள் நெஞ்சத்தில் கையெழுத்து போட்டவர்களாக இருப்பவர்கள் V என்னும் கிம் டாயுங், ஆர்எம் (RM), ஜிமின் (Jimin), ஜங்குக் (Jungkook), சுகா (Suga) ஆகியோர்.

 

தென்கொரியாவில் கட்டாய ராணுவ சேவை சட்டமாக உள்ளது. அதன்படி ஒவ்வொரு கொரிய குடிமகனும், குடிமகளும் குறிப்பிட்ட காலத்திற்கு ராணுவ சேவை செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இதனால் பிடிஎஸ் குழுவினரும் கட்டாய ராணுவ சேவைக்கு சென்றனர். பிடிஎஸ் குழுவின் மற்ற மெம்பர்களான ஜின், ஜே ஹோப் உள்ளிட்டோர் அவர்களது ராணுவ சேவையை கடந்த 2023ம் ஆண்டில் முடித்திருந்தனர்.

 

தற்போது RM, V, Jimin, Jungkook ஆகியோர் தங்களது ஒரு ஆண்டு ராணுவ சேவையை முடித்துவிட்டு நாடு திரும்புகின்றனர். இதனால் அவர்களை வரவேற்க தென்கொரியா முழுவதும் ரசிகர்கள் ஆவலாக தயாராகி வருகின்றனர். வரும் 12ம் தேதி பிடிஎஸ் குழுவின் 12 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காணும் பகுதிகளில் எல்லாம் பர்ப்பிள் வண்ணத்தில் பிடிஎஸ் குழுவினரை வரவேற்று கட்டிடங்களில் பெரிய பேனர்கள் தொங்கவிடப்பட்டுள்ளது. 

 

Edit by Prasanth.K