தொடர்புடைய செய்திகள்
- ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?
- ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!
- சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!
- RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!
- சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்
பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!
உலகமெங்கும் தற்போது பிரான்ச்சைஸ் கிரிக்கெட் போட்டிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. அதில் அதிகளவு டி 20 போட்டிகளாகவே உள்ளன. அதன் உச்சமாக இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் உள்ளன. இதில் விளையாட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த பிரான்ச்சைஸ் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் ஒரு மாதத்தில் சர்வதேசப் போட்டிகளில் ஒரு ஆண்டில் சம்பாதிக்கும் வருவாயை ஈட்டி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். அந்த வகையில் குயிண்ட்டன் டிகாக், ஹென்ரிச் கிளாசன், சுனில் நரேன் என பல திறமையான வீரர்கள் ஓய்வை அறிவித்து விட்டு லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றனர். அந்த வகையில் தற்போது நிக்கோலஸ் பூரன் தன்னுடைய 29 ஆவது வயதிலேயே ஓய்வை அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்