செவ்வாய், 24 ஜூன் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 10 ஜூன் 2025 (09:30 IST)

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

Donald Trump vs Gavin Newsom

கலிஃபொர்னியாவில் அமெரிக்க குடியேற்ற கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ள நிலையில் கலிஃபொர்னியா கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அதிபரான டொனால்டு ட்ரம்ப் குடியேற்ற கொள்கைகளில் ஏற்படுத்தி வரும் கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்காவின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் கலிஃபொர்னியா மாகாணத்தில் மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீஸார், பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டு, நீரை பீய்ச்சி அடித்து போராட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு, கடைகளுக்கும் தீ வைத்ததால் பரபரப்பு எழுந்தது.

 

இந்நிலையில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கலிஃபொர்னியாவிற்குள் 2000 காவல் படையினர், 700 கடற்படையினரை இறக்கியுள்ளார் அதிபர் ட்ரம்ப். சொந்த நாட்டு மக்கள் மீது மிகப்பெரிய அளவில் கட்டவிழ்க்கப்படும் வன்முறை இது என பலரும் ட்ரம்ப் செயலை கண்டித்து வருகின்றனர். அவ்வாறாக கலிஃபொர்னியா மாகாண கவர்னர் கெவின் நியூசம், ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை பாதுகாப்பு பற்றியது அல்ல, அவரது பெர்சனல் ஈகோவால் செய்யும் அடக்குமுறை என விமர்சித்துள்ளார்.

 

கெவின் நியூஸமின் இந்த கண்டனத்தை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக நாம் கலிபொர்னியா கவர்னர் கெவின் நியூசமை கைது செய்ய வேண்டும் என பாதுகாப்புத்துறையை சேர்ந்த டாம் ஹோமனிடம் பரிந்துரைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு அமெரிக்க மாகாணங்களுக்கும் தனித்தனி சட்ட வரம்பு உள்ள நிலையில், அதை நிர்வகிப்பவராக சக்தி வாய்ந்த பதவியில் கவர்னர்கள் உள்ளனர். கலிபொர்னியா கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் முயல்வது சர்வாதிகாரத்திற்கான தொடக்கம் என விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது.

 

Edit by Prasanth.K