செவ்வாய், 24 ஜூன் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 மே 2025 (09:45 IST)

கவரிங் செயினுக்காக மூதாட்டி அடித்துக் கொலை! - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!

மூதாட்டி அணிந்திருந்த கவரிங் மற்றும் தங்க நகைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் 60 வயதான சரஸ்வதி. இவர் நேற்று மாடு மேய்க்க அந்த பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்றிருந்த நிலையில் மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை தேடி வந்தனர்.

 

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சரஸ்வதி காட்டில் இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது காது, மூக்கு உள்ளிட்ட உறுப்புகள் அறுக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயின், காது, மூக்கில் அணிந்திருந்த தங்கத் தோடு, மூக்குத்தி ஆகியவை பறிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

 

அதை தொடர்ந்து போலீஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K