1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Sai pallavi wants to title her biopic as 50 shades of pallavi

எனக்குப் பல முகங்கள் உண்டு… என் பயோபிக்குக்கு டைட்டில் இதுதான் – சாய்பல்லவி ஓபன் டாக்!

சாய் பல்லவி
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றி அவரை தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமானார். அதையடுத்து தமிழில் தியா, என் ஜி கே, கார்கி மற்றும் மாரி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.  முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்நிலையில் அவர் கடந்த காலங்களில் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய பட்ங்களில் நடிக்க மறுத்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படங்களின் கதை அவருக்கு சென்ற போது, அதில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று சொல்லி அவர் நிராகரித்து விட்டார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. அதே போல கிளாமர் வேடங்களில் நடிக்க மறுத்ததாலும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது.

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு அவரின் முதிர்ச்சியான நடிப்பே முக்கியக் காரணம் என சொல்லலாம். இந்நிலையில் சாய்பல்லவி சமீபத்தில் அளித்த நேர்காணலில் தன்னுடைய பல முகங்கள் குறித்துப் பேசியுள்ளார். அதில்” என்னுடைய பயோபிக் எடுக்கணும் என்று அதற்கு ஒரு டைட்டில் கேட்டால் நான் ’50 ஷேட்ஸ் ஆஃப் பல்லவி’ என்றுதான் வைப்பேன். நாம் ஒவ்வொருத்தர் கூடவும் ஒரு மாதிரி இருப்போம். நான் என் நண்பர்களோடு ஒருமாதிரி இருப்பேன். அதே அப்பா அம்மாவுடன் ஒரு மாதிரி இருப்பேன். ஆனால் ஒரு சினிமா ஷூட்டிங் ஸ்பாட் என்றால் அதில் ஒரு மாதிரி இருப்பேன்.  அதனால் “50 shades of Pallavi” என்பது சரியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான ஆல்பத்தை வெளியிட்ட ராஷி கன்னா!