செவ்வாய், 24 ஜூன் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 ஜூன் 2025 (11:08 IST)

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

சிங்கப்பூர் சரக்கு கப்பல் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளான நிலையில், அந்த கப்பலில் இருந்தவர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் தூதரகம் இந்தியாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளது.
 
சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்கு கப்பல், இந்திய கடற்பகுதி அருகே திடீரென நேற்று தீப்பிடித்த நிலையில், அந்த கப்பலில் இருந்த ஊழியர்களை இந்திய கடற்படை மின்னல் வேகத்தில் மீட்டது. இதற்காக, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதகம் தனது வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளது.
 
"நமது இந்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது மிகுந்த நன்றி. சிங்கப்பூர் கப்பல் தீ பற்றி எரிந்த போது தைரியமான மீட்பு நடவடிக்கைகளை இந்திய கடற்படையினர் எடுத்தனர்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
சிங்கப்பூர் கப்பலில் மொத்தம் 22 பேர் சிக்கியதாகவும், அவர்கள் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மங்களூருக்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அந்தக் கப்பலில் சிங்கப்பூர் சீனர்கள், தைவானியர்கள், மியான்மர் நாட்டவர்கள் மற்றும் இந்தோனேசியர்கள் இருந்தனர் என்பதும், நாடு வேறுபாடின்றி இந்தியா அவர்களை காப்பாற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையின் கொழும்பிலிருந்து மும்பை நகரம் வழியாக சிங்கப்பூர் சென்று கொண்டிருந்தபோதே இந்தக் கப்பல் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva