1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Atlee-Allu Arjun Film Fuels Plagiarism Rumors: Is "Vel Pari" Story Being "Copied"?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

அட்லி
அட்லி ஒரு திரைப்படம் இயக்கினால், அந்த படம் வேறொரு படத்திலிருந்து சுட்டதுதான் என நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்து வருவது வழக்கமான ஒன்றுதான். 
 
'ராஜா ராணி' திரைப்படம் 'மௌன ராகம்' படத்திலிருந்து சுட்டது என்றும், 'தெறி' திரைப்படம் 'சத்ரியன்' படத்திலிருந்து சுட்டது என்றும், 'மெர்சல்' திரைப்படம் 'அபூர்வ சகோதரர்கள்' படத்திலிருந்து சுட்டது என்றும், 'பிகில்' திரைப்படம் ஷாருக்கானின் ஹிந்தி திரைப்படத்திலிருந்து சுட்டது என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், தற்போது அவர் அல்லு அர்ஜுன் படத்தை இயக்க இருக்கும் நிலையில், இந்த படம் 'வேள்பாரி' கதையிலிருந்து சுட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாளை அட்லி - அல்லு அர்ஜுன் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், 210 நாட்கள் மொத்தம் படப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், இந்த படம் பாதி சமகாலத்தில் நடக்கும் கதை என்றும், மீதி பீரியட் படம் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த  நிலையில், பீரியட் பகுதிதான் 'வேள்பாரி' கதையிலிருந்து சுட்டது என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது படம் வெளியான பின்னர்தான் உறுதி செய்யப்படும்.
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?