தொடர்புடைய செய்திகள்
- நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!
- பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!
- நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!
- ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!
- சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!
ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?
ஆர்.சி.பி. அணியை அந்த அணியின் உரிமையாளர் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு ஆர்.சி.பி. அணி தற்போதுதான் சாம்பியன் பட்டம் பெற்றிருக்கும் நிலையில், அந்த அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவம் அந்த அணியின் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சில சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அணியின் உரிமையாளர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர்.சி.பி. அணியை விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ஆர்.சி.பி. அணியின் உரிமையாளராக டையோஜியோ பி.எல்.சி. என்ற நிறுவனம் இருக்கும் நிலையில், இந்த அணியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்சிபி அணியின் விலை இந்திய மதிப்பில் 16,834 கோடி ரூபாய் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.சி.பி. அணியை விற்பனை செய்ய இறுதி முடிவு எடுக்கப்பட்டதா, அந்த அணியை வாங்க காத்திருக்கும் நபர்கள் யார் யார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran
