செவ்வாய், 24 ஜூன் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 5 ஜூன் 2025 (14:32 IST)

13 வயது மகளை காதலனுக்கு விருந்தாக்கிய பாஜக பெண் பிரமுகர்! - ஹரித்வாரில் உலுக்கும் சம்பவம்!

Child abuser arrested in Haridwar

ஹரித்வாரில் பாஜக மாவட்டப் பிரிவில் பதவி வகித்து வந்த பெண் பிரமுகர் ஒருவர் தனது 13 வயது மகளை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த அரசியல் பிரமுகர் பெண் தனது கணவரை சில ஆண்டுகள் முன்னர் பிரிந்த நிலையில், தனது 13 வயது மகளோடு தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் வேறு ஒரு நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் அந்த பெண் பிரமுகரின் மகள் மீது ஆசைக் கொண்ட அந்த காதலன் பெண் பிரமுகரின் 13 வயது மகளை வன்கொடுமை செய்துள்ளான்.

 

இந்த விஷயம் பெண் பிரமுகருக்கு தெரிந்தபோதும், அதன் பின்னரும் தொடர்ந்து தனது காதலனுக்கு பெற்ற மகளையே இரையாக்கியுள்ளார் அவர். தொடர்ந்து சிறுமியை ஆக்ரா, பிருந்தாவன் என பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று, விடுதியில் வைத்து பெண் பிரமுகரின் காதலனும், மற்றொரு நபரும் தாயின் முன்பே வைத்து வன்கொடுமை செய்து வந்துள்ளனர். தொடர்ந்து எட்டு முறை அந்த சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதை யாரிடமாவது சொன்னால், உனது அப்பாவை கொன்று விடுவோம் என சிறுமியை அவர்கள் மிரட்டி வைத்துள்ளனர்.

 

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமி, அதை தனது அப்பாவிடம் சொல்லியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பாஜக பெண் பிரமுகரையும், அவரது காதலரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு தலைமறைவான மற்றொரு நபரையும் போலீஸார் தேடி வருகின்றனர். 

 

Edit by Prasanth.K