1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Govt Begins Sale of Onions at Rs 35 per Kg Across 8,914 Ration and Cooperative Stores

ரேசன் கடைகளில் இன்று முதல் வெங்காயம் விற்பனை.. கிலோ ரூ.35 மட்டுமே...

ரேஷன் கடை
தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வைக்கட்டுப்படுத்தவும், மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் தமிழக அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. 
 
இதன் படி, நகர்ப்புறங்களில் உள்ள நியாயவிலை கடைகள், மாவட்ட நுகர்வோர் விற்பனை பண்டக சாலைகள், மொத்த பண்டக சாலைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பண்ணை பசுமைக் கடைகள் உட்பட மொத்தம் 8,914 கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
 
இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற மானிய விலையில் வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
 
மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகளான நாஃபெட்  மற்றும் என்.சி.சி.எஃப்  ஆகியவற்றின் மூலம் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 3 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தச் சிறப்பு விற்பனைத் திட்டம், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தை விலையைத் சீராக வைத்திருக்க அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
 
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
கோவில்களில் செல்போன் கொண்டு செல்லப்படும் விவகாரம்.. அமைச்சர் ரமேஷ் புதிய அறிவிப்பு...