1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Kapil Dev Urges Youngsters to Be Responsible Amid Ongoing CJP Protests Against CEC Gyanesh Kumar

சிஜேபி போராட்டம்.. இளைஞர்களுக்கு கபில்தேவ் முக்கிய அறிவுரை...

கபில் தேவ்
இந்தியாவின் 1983 உலகக்கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ், நாட்டின் இளைஞர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். "இளைஞர்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்கவும், பொறுப்புடன் நடந்து கொள்ளவும் பழக வேண்டும். அவர்கள் நாட்டின் எதிர்காலம், அவர்களை தவறான பாதையில் வழிகாட்ட அனுமதிக்க முடியாது. அவர்கள் எப்போதும் சரியாகவே இருக்க முடியாது, மூத்தவர்களின் அனுபவத்தையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும், "நம்முடையது அழகான நாடு, அதை தவறான திசையில் செல்ல அனுமதிக்க முடியாது" என்றும் 67 வயதான அவர் கூறியுள்ளார்.
 
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்  முறைகேடு விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி, அபிஜித் திப்கே தலைமையிலான 'காக்கரோச் ஜனதா கட்சி'  தொடர் போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் கபில் தேவால் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அக்டோபர் 16-ல் நாடு தழுவிய 'திரங்கா யாத்திரை' நடத்த சிஜேபி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அக்டோபர் 6 ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது காவல் துறை அத்துமீறல் மற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த புகார்கள் மீது மத்திய அரசு மற்றும் டெல்லி காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
போட்டியை வரவேற்கிறோம்!.. எலன் மஸ்க் புகாருக்கு மவுனம் கலைத்த ரிலையன்ஸ்!..