1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. relainace industries answer to elan musk comment

போட்டியை வரவேற்கிறோம்!.. எலன் மஸ்க் புகாருக்கு மவுனம் கலைத்த ரிலையன்ஸ்!..

elan musk
இந்தியாவில் செல்போன் மற்றும் இண்டர்நெட் சேவை கொடுப்பதில் முதன்மையானது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ஒருபக்கம்,  அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் உலகம் முழுவதும் சேட்டிலைட் மூலம் இண்டர்நெட் சேவையை அளித்து வருகிறது.

இந்தியாவிலும் தனது சேவையை விரிவுப்படுத்த நினைத்த ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. ஆனால், சில வருடங்களாகியும் இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை. ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இதை விரும்பவில்லை எனவும், ஸ்டார்லிங் நிறுவனம் இந்தியாவுக்குள் வந்து விட்டால் ஜியோ நிறுவனத்தின் வியாபாரம் படுத்துவிடும் என அவர் நினைப்பதாகவும், அதனால்தான், இந்திய அரசு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை எனவும் சிலர் சொல்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்த எலன் மஸ்க் ‘முகேஷ் அம்பானி.. இந்தியாவின் உண்மையான அதிகாரம் உங்கள் கையில்தான் இருக்கிறது என்பதை உணராமல் போனதற்கு என்னை மன்னித்துவிடுங்கள்..  இந்திய மக்களை ஏகபோக ஆதிக்கத்தின் மூலம் தொடர்ந்து சுரண்டுவதையே நீங்கள் விரும்புவீர்கள்.. இருப்பினும் ஸ்டார்லிங் நிறுவனம் போட்டியிட அனுமதி கொடுப்பது பற்றி பரிசீலிப்பீர்களா?..

இந்தியாவிலும் இணைய வசதி இல்லாத நிறைய கிராமங்கள் இருக்கிறது. அங்குள்ள குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பையும், சிறு தொழில் செய்பவர்கள் தங்கள் பொருட்களை உலகளாவிய சந்தையில் வியாபாரம் செய்யும் வாய்ப்பையும் இழக்கின்றனர். ஸ்டார்லிங்க் சேவை அவர்களின் வாழ்க்கை மேம்படுத்தும்’என கூறியிருந்தார்.

இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த இருந்த நிலையன்ஸ் நிறுவனம் தற்போது மௌனம் கலைத்திருக்கிறது.  போட்டியை வரவேற்கும் அதேவேளையில் எவராக இருந்தாலும் இந்தியாவின் சட்டதிட்டங்களை மதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்..எங்களின் ஜியோ செயற்கைகோள் இணைய சேவையும் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சிஜேபி போராட்டத்தால் எங்கள் வியாபாரம் பாதிக்கிறது.. மோடி, அமித்ஷாவுக்கு டெல்லி வியாபாரிகள் கடிதம்...