1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. yellow alert for twenty five districts in tamilnadu

25 மாவட்டங்களில் கனமழை!.. மஞ்சள் அலார்ட்!.. வானிலை மையம் எச்சரிக்கை!...

rain
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘3.1 கிலோமீட்டர் முதல் 4.5 கிலோமீட்டர் வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கன மழை பெய்யும்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது..

குறிப்பாக கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலட் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கடலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில்  இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என சொல்லப்பட்டிருப்பதோடு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதல்வர் விஜயின் கேரள பயணம் ரத்து!.. பின்னணி என்ன?..