1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Traders Express Concern Over CJP Protest at Connaught Place; Abhijeet Dipke Refuses to Back Down

சிஜேபி போராட்டத்தால் எங்கள் வியாபாரம் பாதிக்கிறது.. மோடி, அமித்ஷாவுக்கு டெல்லி வியாபாரிகள் கடிதம்...

delhi protest
டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் 'காக்கரோச் ஜனதா கட்சி'  இன்று நடத்த திட்டமிட்டுள்ள 'லெஹ்ரா தோ திரங்கா' போராட்டத்திற்கு வர்த்தகர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பண்டிகை மற்றும் திருமணக் காலம் என்பதால், சாலை மறிப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் பெருமளவில் வியாபாரம் பாதிக்கப்படும் என டெல்லி வியாபாரிகள் மகாசங்கம் கவலை தெரிவித்துள்ளது.
 
சதர் பஜார், சாந்தனி சௌக் உள்ளிட்ட முக்கியச் சந்தைப் பகுதிகள் பாதிக்கப்படாத வகையில், வணிக வளாகங்களில் இருந்து தொலைவில் போராட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வர்த்தகர்கள் கடிதம் எழுதியுள்ளனர். முன் எச்சரிக்கையாக சென்ட்ரல் பார்க் மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
அதேவேளையில், சி.ஜே.பி நிறுவனத் தலைவர் அபிஜித் திப்கே இக்கோரிக்கையை நிராகரித்துள்ளார். "அமைதியான போராட்டங்களால் வியாபாரம் பாதிக்கப்படுவதில்லை. நகரத்தை முடக்கி, இணையத்தை ரத்து செய்து அராஜகம் பண்ணும் அரசால்தான் வணிகம் பாதிக்கப்படுகிறது. ஜனநாயக வழியில் கேள்வி கேட்பது எங்களது உரிமை" என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் போராட்டத்தை தடை செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!..