1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Vijay to Pacify Protesting Fishermen as Planning for New Secretariat at Pattinapakkam Gathers Pace

பட்டினப்பாக்கம் தலைமை செயலகம்.. மீனவர்களிடம் முதல்வர் விஜய்யே பேச்சுவார்த்தை நடத்த திட்டமா?

vijay
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 மாடிகளுடன் கட்டப்படவுள்ள புதிய தலைமை செயலக பணிகளுக்காக விரிவான திட்ட அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
இதற்கான முதற்கட்ட பணிகள் முதன்மை தலைமை பொறியாளர் செந்தில் தலைமையிலான குழுவினரால் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்ற எதிர்ப்பும் போராட்டங்களும் மீனவ மக்கள் மத்தியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
 
எனினும், மீனவர்களின் வாழ்வுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தலைமை செயலகம் அமைக்க முதல்வர் தளபதி விஜய் உத்தரவிட்டுள்ளார். "மீனவ குடும்பத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிராக நானே இருப்பேனா?" என்ற அடிப்படையில் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. 
 
தேவைப்பட்டால் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மூலமாக பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பிரச்சனை தொடர்ந்தால் முதல்வர் விஜய்யே நேரில் சென்று மக்களை சந்தித்து விளக்கமளிக்கவும் திட்டமிட்டுள்ளார். மீனவர்களின் எதிர்ப்புகளை பேசி தீர்த்த பிறகே அடுத்தகட்ட கட்டுமான பணிகளைத் தொடங்க விஜய் உறுதியாக உள்ளார்.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
கூவத்தூருக்கு நடிகைகளை கூட்டி போனேனா?.. கருணாஸ் ஆவேசம்!...