1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor karunas talk about kovathur issue

கூவத்தூருக்கு நடிகைகளை கூட்டி போனேனா?.. கருணாஸ் ஆவேசம்!...

karunas
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பின் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால் அந்த பதவியை சசிகலா பறித்தார்.
ஓ.பன்னீர் செல்வம் திமுகவுடன் நெருக்கமாக இருப்பதால் அவரின் பதவியை பறித்ததாக சசிகலா கூறினார்.

எனவே, மெரினா கடற்கரையில் தியானம் செய்து தர்ம யுத்தத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். அதோடு அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற முயன்றார்.
இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்களை  கூவத்தூரில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்க சசிகலா தரப்பு ஏற்பாடு செய்தது.  மேலும் அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராகவும் சசிகலா தேர்ந்தெடுத்தார். அப்போது அதிமுக கூட்டணியில் கருணாஸும் இருந்தார். கூவத்தூரில் அவரும் இருந்தார். அப்போது அவரை பற்றி பல வதந்திகள் பரவியது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கருணாஸ் ‘கூவத்தூரில் நான் துணை நடிகைகளை கூட்டிக்கிட்டு போய் டான்ஸ் ஆட வைத்தேன் என பாம்பேவில் உள்ள ஒரு பத்திரிக்கையாளர் பொய்யாக எழுதிட்டார்.. அதை சிலர் நம்பிட்டாங்கன்னு எனக்கு சின்ன வருத்தம் இருக்கு.. நான் குடிப்பேன்.. வீண் சண்டை கூட போடுவேன். ஆனா பெண்கள் விஷயத்துல நான் அடிப்படையில் ஒழுக்கமானவன்.. காதலித்து திருமணம் பண்ணவன்.. என்னை நம்பி வந்த ஒரே ஒரு ஆள் என் மனைவி கிரேஸ் மட்டும்தான்’ என சொல்லியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வீர வசனம் பேசாதீங்க.. கொஞ்சம் அடக்கி வாசிங்க!.. அன்புமணி கோபம்...