1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Udhyanidhi Stalin gets trolled in social media

சின்னவர் பட்டம் சின்ன தத்தி ஆனது... இணையத்தில் பங்கம்!

உதயநிதி ஸ்டாலின்
தற்போது சமூக வலைத்தளமான டிவிட்டரில் #சின்ன_தத்தி டிரெண்டாகி வருகிறது.
 
சேப்பாக்கம் திமுக எம்.எல்,ஏவான உதயநிதி ஸ்டாலினை பலரும் பல பட்டப்பெயர்களில் அழைக்கும் நிலையில் தனது பட்டப்பெயரை அவரே அறிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் உதயநிதி அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் போன்ற ஆதரவு குரல்கள் திமுகவிற்குள் ஒலிக்க தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில் எங்கு திமுக நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு உதயநிதி படத்துடன் இளைஞரணியினர் போஸ்டர்கள், பேனர்களை அமைக்கின்றனர். அதில் பல்வேறு பட்டப்பெயர்களையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். முக்கியமாக “மூன்றாவது கலைஞர்” என்ற பெயர் ரொம்ப பேமஸாக உள்ளது.
 
தன்னை பல்வேறு பட்டப்பெயர்கள் சொல்லி அழைப்பது குறித்து கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், தன்னை “மூன்றாவது கலைஞர்”, “இளம் தலைவர்” போன்ற பெயர்களில் அழைக்க வேண்டாம் என்றும் இனி “சின்னவர்” என்று அழைத்தாலே போதும் என்றும் கூறியிருந்தார். 
 
இதனிடையே தற்போது சமூக வலைத்தளமான டிவிட்டரில் #சின்ன_தத்தி டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கின் கீழ் உதயநிதி ஸ்டாலின் விமர்சிக்கப்பட்டு வருகிறார். 
About Writer
Sugapriya Prakash