1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (12:41 IST)

ராகுல்காந்தி, சரத்பவார் முன்னிலையில் யஷ்வந்த் சின்கா வேட்புமனு தாக்கல்!

Yashwant Sinha
எதிர்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 
ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு சமீபத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது பிரதமர் மோடி உள்பட பாஜக பிரமுகர்கள் உடனிருந்தனர். 
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா தேர்வு செய்யப்பட்டார். இவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 
யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுவை தாக்கல் செய்தபோது காங்கிரஸ் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக செய்தியாளர்களிடம் யஷ்வந்த் சின்ஹா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன