1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Udhayanithi Stalin announce his nickname officially

”மூன்றாம் கலைஞர்” வேணாம்.. உதயநிதி ஸ்டாலினின் புதிய பெயர்!

Udhayanithi Stalin
சேப்பாக்கம் திமுக எம்.எல்,ஏவான உதயநிதி ஸ்டாலினை பலரும் பல பட்டப்பெயர்களில் அழைக்கும் நிலையில் தனது பட்டப்பெயரை அவரே அறிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் உதயநிதி அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் போன்ற ஆதரவு குரல்கள் திமுகவிற்குள் ஒலிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் எங்கு திமுக நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு உதயநிதி படத்துடன் இளைஞரணியினர் போஸ்டர்கள், பேனர்களை அமைக்கின்றனர். அதில் பல்வேறு பட்டப்பெயர்களையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். முக்கியமாக “மூன்றாவது கலைஞர்” என்ற பெயர் ரொம்ப பேமஸாக உள்ளது.

தன்னை பல்வேறு பட்டப்பெயர்கள் சொல்லி அழைப்பது குறித்து கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், தன்னை “மூன்றாவது கலைஞர்”, “இளம் தலைவர்” போன்ற பெயர்களில் அழைக்க வேண்டாம் என்றும், இனி “சின்னவர்” என்று அழைத்தாலே போதும் என்றும் கூறியிருக்கிறார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கேளிக்கை விடுதி சென்ற 21 சிறுவர்கள் மர்ம மரணம்! – தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு!